Powered By Blogger

Saturday, April 3, 2010

விடுகதைகள்

விடுகதைகள்

1.வாயில்லை புத்திமதிகள் சொல்வான்
காலில்லை கடந்தும் செல்வான்
கையில்லை உளங் காட்டிக் கொள்வான்
உயிரில்லை ஒரு நாளும் சாக மாட்டான். - அது என்ன?

2. மேலே பறக்கும் பருந்தல்ல
கட்டுண்டு இருக்கும் மாடல்ல
அழகான வாலுண்டு குரங்குமல்ல - அது என்ன?

3. ஊர் உண்டு மக்களில்லை
மலையுண்டு மரங்களில்லை
ஆறுண்டு நீரில்லை
அணையுண்டு கல்லில்லை
வழி உண்டு வாகனமில்லை
வண்ணமுண்டு உயிரே இல்லை - அது என்ன?

4. குடிக்கத் தண்ணீர் உண்டு
குளிக்கத் தண்ணீர் இல்லை - அது என்ன?

5. மனிதன் போடாத பந்தலிலே
மலர்ந்து கிடைக்குது பூ - அது என்ன?

6. காலும் கையும் உண்டு, விரல் இல்லை
முதுகு உண்டு, தலை இல்லை
தன்னைத் தேடி வந்தோரைச் சுமப்பான். - அது என்ன?

7. ஆற்றைக் கடக்கும், அக்கரை போகும்
தண்ணீரில் கலக்காது, தானும் நனையாது - அது என்ன?

8. வெயிலில் காயும்
மழையில் நனையும்
அண்டி வருவோர்க்கு
அடைக்கலமும் தரும் - அது என்ன?

9. யாரும் செய்யாத கதவு
தானே திறக்கும் தானே மூடும் - அது என்ன?

10. கனலைப் பிடித்து கண்ணீர் வடிக்கும்
கடைசியில் கரைந்தும் போகும் - அது என்ன?

இது தான் அது


 

1. புத்தகம்
2. பட்டம்
3. தேசப்படம்
4. தேங்காய்
5. நட்சத்திரம்
6. நாற்காலி
7. பாலம்
8. குடை
9. கண் இமை
10. மெழுகுவர்த்தி.

No comments:

Post a Comment