Powered By Blogger

Sunday, March 21, 2010

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்பது சில சொற்களின் இலக்கண குறிப்பு. ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்பது எதிர்மறையான பொருளில் வரும் ஒரு வினைச்சொல், அதன் கடைசி எழுத்து இல்லாமல் (ஈறு = கடைசி; கெட்ட = இல்லாமல்) வந்து, அடுத்து வரும் பெயர்ச்சொல்லுக்கு விளக்கம் தருவதாக அமையும் சொல். எடுத்துக்காட்டுகள்:

* செல்லாக் காசு (= செல்லாத காசு.) என்பதில் செல்லா என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். செல்லும் என்பது உடன்பாட்டு பொருள். செல்லாத என்பது எதிர்மறைப் பொருள். செல்லாத என்னும் சொல், செல்லாதது என்று முடிவு பெறாமல் எச்சமாக வரும் வினைச்சொல். செல்லா என்பது செல்லாத என்னும் சொல்லின் கடைசி எழுத்தாகிய த இல்லாமல் (கெட்டு) வருவது. மேலும் செல்லா என்னும் சொல், காசு என்னும் பெயர்ச்சொல்லைப் பற்றிக் கூறவந்த வினைச்சொல். எனவே செல்லாக் காசு என்னும் தொடரில், செல்லா என்னும் சொல்லை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்று கூறுவர்.
* பிற எடுத்துக்காட்டுகள்: வணங்காத் தலை, அழியாப் புகழ், கேளாச் செவி, ஓயாத் தொல்லை

இப்படி ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லெழுத்து மிகும் என்னும் இலக்கண விதியின் படி செல்லாக் காசு, அழியாப் புகழ், கேளாச் செவி, ஓயாத் தொல்லை என்று வல்லின ஒற்று[1] மிகுந்து (= கூடுதலாக) வரும்.

Saturday, March 20, 2010

திடீர் உணவு மோகம்

மலேசியர்கள் மத்தியில் திடீர் உணவு மோகம் குறிப்பாக இளையோர்
மத்தியில் எல்லையற்றுப் போய்விட்டது. சில குடும்பங்களில் ஒரு மாதத்தில் பாதி நாள் வீட்டில் சமைப்பார்களா என்று கூட நான் யோசிப்பது உண்டு. அந்த அளவு துரித உணவு மோகம் பலரை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அதற்காக விளம்பரங்களைத் தடை செய்வதால் இது தணியும் என்று நம்பவில்லை. ஒட்டு மொத்த மலேசியர்களின் உ½வு பழக்கத்தை மெல்ல மெல்ல மாற்ற வேண்டும். ஓர் உணவின் அபாயத்தை மலேசியர்கள் புரிந்து கொள்ளும் அணுகுமுறை கையாளப்பட வேண்டும் என்று தேசிய இருதய சிகிச்சைக் கழக உணவு துறையின் உயர்நிலை நிர்வாகி மேரி ஜோன்