Powered By Blogger

Wednesday, July 7, 2010

சொற்றொடர் பிழைகளும் திருத்தங்களும்.


சொற்றொடர் பிழைகளும் திருத்தங்களும்.

ஒரு மொழியின் உயிராக விளங்குவது சொற்றொடர்
அமைப்பு எனலாம். கால நிலையால் ஒரு மொழியின் உச்சரிப்புமாறுபடலாம்; சொற்கள் சிதைந்து வேறுபடலாம்ஆனால் ஒரு மொழியின் சொற்றொடர்அமைப்பு மட்டும் மாறுபடுவதில்லை. இது மொழிநூல்வல்லுநர் பற்பல்மொழிகளை ஆராய்ந்து கண்டஉண்மையாகும்.

    சொற்றொடர்களில் சில வகையான பிழைகள்அமைந்து காணப்படுகின்றன. எழுவாய்க்கேற்ற பயனிலை இன்றிப்பிழையுடையதாக அமைந்திருத்தலும், திணைவழு, பால்வழு, எண்வழு, இடவ ழுமுதலிய பிழைகளும் அமைந்து
காணப்படும்இப்பிழைகளெல்லாம் நீங்குவதற்குச் சில குறிப்புகளைமனத்தற்கொள்ளவேண்டும்உயர்திணையிலுள்ள எழுவாய்கள் உயர்திணைப் பயனிலைளக் கொண்டுமுடியும்

அஃறிணைஎழுவாய்கள்,  அஃறிணைப்பயனிலைகளைக் கொண்டு முடியும்.
இருதிணைஎழுவாய்கள் கலந்து வந்தால், அவை சிறப்புக கருதின் உயர்திணைப்       பயனிலை கொண்டுமுடியும்
அவை இழிவு கருதின் அஃறிணைப்பயனிலை கொண்டுமுடியும்இரு திணைப் பெயர்கள்கலந்து வந்தால், மிகுதி காரணமாக ஒரு திணைக்குறிய வினைகொண்டு முடியும். ப லஎச்சத் தொடர்கள் ஒரு வினைகொண்டு முடிந்தால் அவை தனித்தனியே 'உம்' பெற்றும், 'தாம்' கொண்டும்முடியும். வெவ்வேறு சிறப்பு வினைகளுக்குரிய பொருள்களின் பெயர்கள் தனித்தனியாகவோ,தொகுதியாகவோ கூறப்பட்டு ஒருவினை முடிவு பெற்றால், அவைபொது வினைகொண்டு முடியும்.   இக்குறிப்புகளை மனத்திற்கொண்டு எழுதினால்
சொற்றொடர்களில் நேர்கின்ற பிழைகளத் தவிர்க்கலாம். சில
சொற்றொடர்பிழைகளையும், அவற்றின்திருத்தங்களையும் கண்டுநோக்குவோமாக.

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=
    பிழை                                                                                            திருத்தம்
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-==-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-

(1) இங்கே வந்தவன் அவன் அல்ல                                                                                                                                               .......... அவன்அல்லன்

(2) இம்மருந்து அவர் நோய்க்குமிகவும் ஏற்றவன்.                                                                                                          ....  மிகவும் ஏற்றது.

(3) நாகனும் நாயும் வந்தன.                                                                                                                                                     .......வந்தனர்.

(4)  மூர்க்கனும் முதலையும்   கொண்டது விடார் .                                                                                                              ........... விடா.

(5) தெருவில் இரண்டு நாய்கள்  சண்டையிட்டுக் கொண்டிருந்தது.
           .......... சண்டையிட்டுக்        கொண்டிருந்தன.
(6)     கழுதைகள் வேகமாக   ஓடாது.                                                                                                                              ...................... வேகமாக ஓடா.

(7 ) நான் தந்த புத்தகம இதுவல்ல.                                                                                                                                                  ........ ..........................இஃதன்று.

(8) இதனைச் செய்தவர் அவர் அல்லவா?                                                                                                           .....................அவர்         அல்லரா?

(9) அந்த மரங்க ள்பார்வைக்குச் சிறியதாய் இருக்கும்.                                                                                                                          .... சிறியனவாய்         இருக்கும்.

(10)  முதல்வர்  தன்குடிகளிடம் அன்பாய் இருக்கிறார்                           ......தமகுடிகளிடம்.........

(11) மாணாக்கர் தான் படிப்பதற்குப் புத்தகங்களைக் க                                ......தாம்      படிப்பதற்கு...

(12) எனது மாணவனது கட்டுரைகளைத் திருத்தினேன்.                                                                               ........என்      மாணவனுடைய....

(13) நாச்சியப்பன் தமதுபையனைக் கூப்பிட்டார்...                                                                                                            . .....தம் பையனை.....................

(14) மதிவாணன்  எனது புத்தகங்களை எடுத்தார்.                                                                                                                                                 ..........என்னுடைய அல்லது    என்  புத்தகங்களை........

(15) அங்கே  என் புத்தகம் உள.                                                                                                                                                     ...... உளது அல்லது உண்டு.

(16) என் தோட்டத்தில் ஒரு  மாமரம் ஒன்று காய்க்கிறது.
                            ஒருமாமரம் அல்லது மரம்ஒன்று..

(17) அங்கே பல அறிஞர்கள் பேசினார்கள்.                                                                                                                           ............அறிஞர் பலர்......................

(18) நம்பியுடைய நல்லபண்புகளை எல்லாம் நம்மதாக்கிக்கொள்ளுதல் வேண்டும்.
.................................................................நம்மவையாக்கிக் கொள்ளவேண்டும்.

(19) ஒவ்வொரு ஊர்களிலும் தேர்தல் பிரச்சாரம்நடைபெருகிறது......
                                                .....................ஊரிலும் .................

(20) அருளப்பர் கல்வி அறிவு ஒழுக்கத்திற் சிறந்தவர்.

                                       ......... ......கல்வி அறிவு ஒழுக்கங்களிற்.........................


ஒற்றுப்பிழைகள்


ஒற்றுப்
பிழைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கீழ் உள்ள தொடர்களை வாய்விட்டுப் படியுங்கள்.

பதிவர்
கூட்டத்திற்குச் சென்றேன்

தாமிராவைக் கண்டேன்.பேசிப்பார்த்தேன்.கலைஞர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.கலைஞர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.

இவற்றைப் படிக்கும்பொழுது தொடர்களின் இடையில் 'ச்', 'க்', 'ப்', 'த்' என்னும் எழுத்துகள் அமைந்து இயல்பாக ஒலிப்பதை அறிவீர்கள். இவ்வாறன்றி, 'கூட்டத்திற்கு சென்றேன்', 'தாமிராவை கண்டேன்'. 'பேசி பார்த்தேன்', 'உண்ணாவிரதத்தை தொடங்கினார்' எனப் படிக்கும்போது இயல்பான ஒலியமைப்பு இல்லை என்பதை அறியலாம்.
நிலைமொழிகளோடு ', , , ' வருக்கத்தில் தொடங்கும் வருமொழிகள் அமையும்பொழுது 'க், ச், த், ப்' மிகும் இடங்களை அறிந்து அவை என்னென்ன இடங்கள் எனக் கூறியுள்ளார்கள் . நம் இலக்கணத்தில். அவ்வாறு அறியாது பயன்படுத்தினால் பொருள் வேறுபாடு ஏற்படும்.
-டு 1:
'நாடி துடிக்கிறது' என்னும்பொழுது 'ஒருவனது கை நாடி துடிக்கிறது' என்று பொருள். 'நாடித்துடிக்கிறது' என்னும்பொழுது 'ஒருவரை
நாடித்(விரும்பி) துடிக்கிறது' என்று
பொருள்படும்.

-டு 2:
'இது ஒரு தந்தப்பெட்டி' 'நண்பர் எனக்குத் தந்தபெட்டி''தந்தப் பெட்டி' என்னும்பொழுது 'தந்தத்தால் ஆனப்பெட்டி' எனவும், 'தந்த பெட்டி' என்னும்பொழுது 'கொடுத்த பெட்டி' எனவும் பொருள்படுகிறது. எனவே வல்லினம் மிகும் இடம், மிகா இடம் அறிதல் வேண்டும்கீழே வல்லினம் மிகும் இடங்கள் சிலவும் வல்லினம் மிகா இடங்கள்சிலவும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அறிந்து பயன்படுத்துவதன் மூலம் சந்திப் பிழைகளைத் தவிர்க்கலாம்.

வலிமிகும்
இடஙகள்
:

  1. அப்படி, இப்படி என்னும் சொற்களின் பின் வலிமிகும்:- அப்படி + கூறினான் = அப்படிக் கூறினான், இப்படி + சொன்னார் = இப்படிச் சொன்னார்.
  2. . ஆய், போய் என்னும் வினையெச்சங்களின:- பின் வலிமிகும். நன்றாய் + பேசினார் = நன்றாய்ப் பேசினார்.
  3. அங்கு, இங்கு என்னும் சுட்டுத் திரிபுப் பெயர்களின் பின் வலிமிகும்:- அங்கு + கண்டேன் = அங்குக்கண்டேன். இங்கு + பார்த்தேன் = இங்குப் பார்த்தேன்.
  4. இரண்டாம் வேற்றுமை உருபுக்குப் பின்வரும் வலி மிகும்:- பையை + கொடு = பையைக் கொடு.
  5. நான்காம் வேற்றுமை உருபிற்கும் பின்வரும்வலிமிகும்:- சென்னைக்கு + சென்றான் = சென்னைக்குச்சென்றான்.
  6. ஓரெழுத்து
    ஒருமொழியின் பின்வலிமிகும்:- தை + திங்கள் = தைத்திங்கள்
    தீ + பற்றியது = தீப்பற்றியது
வலிமிகா
இடங்கள்
:

1. எழுவாய்த் தொடரில் வலிமிகாது. குரங்கு + கடித்தது = குரங்கு கடித்தது.
2. வினைத் தொகையில் வலிமிகாது. விளை + பயிர் = விளைபயிர்

3. உம்மைத் தொகையில் வலிமிகாது. செடி + கொடி = செடிகொடி

4. அடுக்குத் தொடரில்வலிமிகாது. தீ + தீ = தீ தீ

5. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலிமிகாது. நீர் + குடித்தான் = நீரகுடித்தான்.