Powered By Blogger

Friday, May 3, 2013

பேரா மாநில வளர்தமிழ் விழா 2013

கடந்த 28-4-2013ல் சேக் அப்துல் கணி இடைநிலைப் பள்ளி, பீடோரில் 13ஆம் ஆண்டு பேரா மாநில அளவிளான வளர்தமிழ் விழா விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவினை பத்தாங் பாடங் மாவட்ட இடைநிலைப்பள்ளிகளின்  தமிழ்மொழி பாடக்குழுவின் தலைவர் திரு.நாராயணன் கிருஷ்ணன் மற்றும் பத்தாங் பாடாங் மாவட்ட தலைமையாசிரியர் மன்றத் தலைவர் திருமதி குப்பாயி இராமன் கூட்டுத் தலைமயில் ந்டைபெற்றது.   பேரா மாநில கல்வி இலாகாவில் இருந்து தமிழ் மொழிக்கான துணை இயக்குனர் திரு.சந்திரசேகரன், தமிழ்ப்பள்ளிகளின் கண்காணிப்பாளர் திரு நா.மனோகரன், கிந்தா மாவட்ட கண்காணிப்பாளர்.திரு.தவமணி, ஹிலிர் பேரா கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் ஆகியோர் வந்திருந்து சிறப்பு செய்தனர்.                                                                                                                                                 இந்நிகழ்வில் பேரா மாநிலத்தில் உள்ள பத்து மாவட்டங்களை பிரதிநிதித்து ஏறத்தாள 430 ஆரம்ப இடைநிலைப்பள்ளி மாணவர்கள் பங்கு பெற்றனர். நிகழ்வை பத்தாங் பாடாங் மாவட்ட கல்வி அதிகாரி தொடங்கி வைக்க பிற்பகல் 3.00 வரை நடைபெற்றது. வந்திருந்த மாணவர்களுக்கு சுவையான காலை உணவும் மதிய உணவும் வழங்கப்பட்டது. நிறைவு விழாவுக்கு தாப்பா நாடாளும் மன்ற உறுப்பினரும் கூட்டரசு நகர்ப்புற நல்வாழ்வுத்துறை துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ.மு.சரவணன் அவர்கள் வருகை தந்து, சுவையான இலக்கிய உரையொன்றையும் ஆற்றி சிறப்பித்தார். மேலும் திரு.நாராயணன் அவர்களின் வேண்டுகோளையேற்று வளர்தமிழ் விழாவினை தேசிய அளவில் கொண்டு செல்வதற்கும் ஆவன் செய்வதாகக் கூறினார். இந்நிகழ்வுக்கு எதிர்பாரா வகையில் டத்தோஸ்ரீ உத்தாமா இந்திராணி சாமிவேலுவும், மாஷா கல்லூரி நிறுவனர் டத்தோ டாக்டர் ஹானிபா அவர்களும் வந்திருந்தனர். அதிக புள்ளிகள் பெற்று குவால கங்சார் மாவட்டம் வாகையர் பட்டம் வெற்றது. அடுத்த ஆண்டு இந்நிகழ்வு லாருட் மாத்தாங் செலாமா மாவட்டத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட்டுள்ளது.
தினக்குரல் செய்தி
எல்லாம் ஒழுங்க நடக்குதா!

நிறைய நாற்காலி இருக்கு.அவசரம் வேண்டாம்

வருகையாளர்களை பாரும்மா1

கொடுக்கிறீங்களா! வாங்கிறீங்களா!

என்ன இன்னும் தொடங்களையா!
தேசியகீதம் ஒலிக்கப்படுகிறது.

துணை இயக்குனர் என்றால்  ஒரு இடத்தில் நிற்கக்கூடாது

நீர்தான் குவாலகங்சார் அமுதாவா?

பள்ளீ முதல்வருக்கு கொடுக்களைன்னா எப்படி!

இவர்தான் மாவட்ட கல்வியதிகாரியோ!

இவங்கெல்லாம் நீதிபதிகள்

!
போட்டியாளர்கள் இருகட்டும். முதல்லஎன்னைப் பிடிப்பா!

முதுகுத் தண்டு வளையக்கூடாது.டத்தோவை பாருங்கள்!


தேர்தல் பரப்புரைக்கிடைய இளைபாரல்.

எப்ப தேசிய அளவிலான வளர்தமிழ் விழா?

கிந்தா மாவட்ட கண்காணிப்பாளர் சொல்லுவதைக் கேளுங்க!

உங்கள் வெற்றி தமிழின் வெற்றி

அம்மாகிட்ட சான்றிதழ் வாங்க கொடுத்துவச்சிருக்கனும்



அரங்கம் நிறைந்தக்கூட்டம் என்றால் இதுதானா

தலைமைநீதிபதின்னா சும்மாவா