Powered By Blogger

Friday, October 25, 2013

தமிழ் மொழி படிவம் மூன்றுக்கான பணிமனை

கடந்த 23-10-2013 முதல் 26-10-2013 வரை தெலுக் இந்தான் ஸ்ரீ செத்தியா இடைநிலைப் பள்ளியில் தமிழ்மொழி படிவம் மூன்றிற்கான புதிய தேர்வுக்கான ஆவனங்கள் தயாரிக்கும் பணி மனை நடை பெற்றது. இதனை திரு.வேலுமணி, திரு.கிருஷ்ணன் மற்றும் திருமதி.வசந்தா வழி நடத்தினர்.இதில் பத்தாங் பாடங், மஞ்சோங் மற்றும் கீழ் பேரா மாவட்ட ஆசிரியர்கள் பங்கு பெற்றனர்.
பணியில் தீவிரம்


அவ்வப்போது நாட்டு நடப்பிலும் கவனம்

தீயாக வேலை செய்யனும்

இதைத்தான் கண்ணும் கருத்தும் என்பது

Sunday, October 6, 2013

ஆண்டிறுதி விருந்து

கடந்த 5-6-2013ல் எங்கள் பள்ளியின் வருடாந்திர விருந்து ஈப்போ, ஹெரிட்டேஜ் தங்கும்  விடுதியில் விமர்சையாக நடைபெற்றது. அடுத்த ஆண்டு 26-5-2014ல் பணி ஓய்வு பெறவிருப்பதால் இதுவே எனது கடைசி விருந்தாகையால் எம்மை பொருத்தவரை முக்கிய நிகழ்வாகும்



Tuesday, October 1, 2013

கேமரன் மலை சுற்றுலா

கடந்த 21-9-2013ல் எங்களது தமிழ் மொழிக் கழகம் கேமரன் மலைக்கு சுற்றுலா சென்று வந்தது. கடந்த மாவட்ட மற்றும் மாநில வளர்தமிழ் விழாவில் அளப்பரிய தொண்டூழியம் புரிந்த மாணவர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில் இச்சுற்றுலா  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வளர்தமிழ் விழாவில் எஞ்சிய பணத்தில் இருந்து இச்சுற்றுலாவுக்கு செலவிடப்பட்டது.அது தொடர்பான படங்களை கீழே காண்க.
போ எஸ்டேட்  'டி' கார்டன்

சுங்கை பால்லாஸ் டிவிஸன்

படிவம் ஐந்து மாணவிகள்













Tuesday, September 24, 2013

பரிசளிப்பு விழா 2013

   
 கடந்த ஆண்டு பி.எம்.ஆர் தேர்வில் 100 சதவிகித தேர்வை எட்டியமைக்கு எனக்கு வழங்கப்பட்ட சான்றிதழ். தேர்வு எழுதிய 29 மாணவர்களும் சிறப்பாக தேர்வு பெற்றனர்.  6 மாணவர்கள் A வும், 4 மாணவர்கள் B-யும், 13 மாணவர்கள் C-யும், 6 மணவர்கள் D-யும் பெற்றனர்.

Monday, September 16, 2013

பத்தாங் பாடாங் மாவட்ட வளர்தமிழ் விழா-2013

தமிழ் நேசனில் செய்தி
          கடந்த 6 -4-2013ல் சேக் அப்துல் கணி இடைநிலைப் பள்ளி, பீடோரில் 13ஆம் ஆண்டு பத்தாங் பாடாங்  அளவிளான வளர்தமிழ் விழா விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவினை பத்தாங் பாடங் மாவட்ட இடைநிலைப்பள்ளிகளின்  தமிழ்மொழி பாடக்குழுவின் தலைவர் திரு.நாராயணன் கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் பத்தாங் பாடாங் மாவட்டத்தில்  உள்ள  பதினாங்கு இடைநிலைப் பள்ளிகளைப் பிரதிநிதித்து ஏறத்தாள 230  மாணவர்கள் பங்கு பெற்றனர். நிகழ்வை பேரா மாநில தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளர் திரு.நா.மனோகரன் அவர்கள்  தொடங்கி வைக்க பிற்பகல் 3.00 வரை நடைபெற்றது. வந்திருந்த மாணவர்களுக்கு சுவையான காலை உணவும் மதிய உணவும் வழங்கப்பட்டது. நிறைவு விழாவுக்கு  தொழில் அதிபர் சுங்கை கிருஷ்ணன்  அவர்கள் வருகை தந்து, சிறப்பித்தார். திரு.கிருஷ்ணன் அவர்கள்  வழங்கிய தாரளாமான நன்கொடையால் இந்நிகழ்வு இந்நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற முடிந்ததை திரு.நாராயணன்   அவர்கள் தமது நன்றியுரையில் குறிப்பிட்டார். சிலிம் ரீவரைச் சேர்ந்த டத்தோ சுல்கிப்லி முகமட் இடைநிலைபள்ளி தொடர்ந்து இரண்டாவது முறையாக  வாகையர் பட்டத்தை வென்றது.
வருக! வருக!

மீண்டும் ரோகிணிதான் வாகையாளர். வாழ்த்துக்கள்

என்ன ஒரு சந்தோஷம்

எங்க ஊர் பெருசுங்க

இன்னும் அரங்கம் நிறையலெயே

வளர்தமிழ்விழா ஆபத்தாண்டவர் கிருஷ்ணன்

Friday, May 3, 2013

பேரா மாநில வளர்தமிழ் விழா 2013

கடந்த 28-4-2013ல் சேக் அப்துல் கணி இடைநிலைப் பள்ளி, பீடோரில் 13ஆம் ஆண்டு பேரா மாநில அளவிளான வளர்தமிழ் விழா விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவினை பத்தாங் பாடங் மாவட்ட இடைநிலைப்பள்ளிகளின்  தமிழ்மொழி பாடக்குழுவின் தலைவர் திரு.நாராயணன் கிருஷ்ணன் மற்றும் பத்தாங் பாடாங் மாவட்ட தலைமையாசிரியர் மன்றத் தலைவர் திருமதி குப்பாயி இராமன் கூட்டுத் தலைமயில் ந்டைபெற்றது.   பேரா மாநில கல்வி இலாகாவில் இருந்து தமிழ் மொழிக்கான துணை இயக்குனர் திரு.சந்திரசேகரன், தமிழ்ப்பள்ளிகளின் கண்காணிப்பாளர் திரு நா.மனோகரன், கிந்தா மாவட்ட கண்காணிப்பாளர்.திரு.தவமணி, ஹிலிர் பேரா கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் ஆகியோர் வந்திருந்து சிறப்பு செய்தனர்.                                                                                                                                                 இந்நிகழ்வில் பேரா மாநிலத்தில் உள்ள பத்து மாவட்டங்களை பிரதிநிதித்து ஏறத்தாள 430 ஆரம்ப இடைநிலைப்பள்ளி மாணவர்கள் பங்கு பெற்றனர். நிகழ்வை பத்தாங் பாடாங் மாவட்ட கல்வி அதிகாரி தொடங்கி வைக்க பிற்பகல் 3.00 வரை நடைபெற்றது. வந்திருந்த மாணவர்களுக்கு சுவையான காலை உணவும் மதிய உணவும் வழங்கப்பட்டது. நிறைவு விழாவுக்கு தாப்பா நாடாளும் மன்ற உறுப்பினரும் கூட்டரசு நகர்ப்புற நல்வாழ்வுத்துறை துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ.மு.சரவணன் அவர்கள் வருகை தந்து, சுவையான இலக்கிய உரையொன்றையும் ஆற்றி சிறப்பித்தார். மேலும் திரு.நாராயணன் அவர்களின் வேண்டுகோளையேற்று வளர்தமிழ் விழாவினை தேசிய அளவில் கொண்டு செல்வதற்கும் ஆவன் செய்வதாகக் கூறினார். இந்நிகழ்வுக்கு எதிர்பாரா வகையில் டத்தோஸ்ரீ உத்தாமா இந்திராணி சாமிவேலுவும், மாஷா கல்லூரி நிறுவனர் டத்தோ டாக்டர் ஹானிபா அவர்களும் வந்திருந்தனர். அதிக புள்ளிகள் பெற்று குவால கங்சார் மாவட்டம் வாகையர் பட்டம் வெற்றது. அடுத்த ஆண்டு இந்நிகழ்வு லாருட் மாத்தாங் செலாமா மாவட்டத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட்டுள்ளது.
தினக்குரல் செய்தி
எல்லாம் ஒழுங்க நடக்குதா!

நிறைய நாற்காலி இருக்கு.அவசரம் வேண்டாம்

வருகையாளர்களை பாரும்மா1

கொடுக்கிறீங்களா! வாங்கிறீங்களா!

என்ன இன்னும் தொடங்களையா!
தேசியகீதம் ஒலிக்கப்படுகிறது.

துணை இயக்குனர் என்றால்  ஒரு இடத்தில் நிற்கக்கூடாது

நீர்தான் குவாலகங்சார் அமுதாவா?

பள்ளீ முதல்வருக்கு கொடுக்களைன்னா எப்படி!

இவர்தான் மாவட்ட கல்வியதிகாரியோ!

இவங்கெல்லாம் நீதிபதிகள்

!
போட்டியாளர்கள் இருகட்டும். முதல்லஎன்னைப் பிடிப்பா!

முதுகுத் தண்டு வளையக்கூடாது.டத்தோவை பாருங்கள்!


தேர்தல் பரப்புரைக்கிடைய இளைபாரல்.

எப்ப தேசிய அளவிலான வளர்தமிழ் விழா?

கிந்தா மாவட்ட கண்காணிப்பாளர் சொல்லுவதைக் கேளுங்க!

உங்கள் வெற்றி தமிழின் வெற்றி

அம்மாகிட்ட சான்றிதழ் வாங்க கொடுத்துவச்சிருக்கனும்



அரங்கம் நிறைந்தக்கூட்டம் என்றால் இதுதானா

தலைமைநீதிபதின்னா சும்மாவா