Powered By Blogger

Thursday, August 30, 2012

அதிகாரபூர்வ கடிதம்


வழிகாட்டிக் கட்டுரை
அதிகாரபூர்வ கடிதம்
1.கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்பினை அடிப்படையாகக் கொண்டு ஓர் எழுத்துப் படிவத்தை 80-100 சொற்களுக்குள் எழுதுக.
நீர் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் குப்பைகள் அகற்றபடாமல் இருந்து வருகிறது. இது குறித்து மாவட்ட நகராண்மை கழகத்துக்கு புகார்க் கடிதம் எழுதுக. கடிதம் பின் வரும் கூறுகளை கொண்டிருக்க வேண்டும்.
·          சிக்கலை கூறுதல்
·          இச்சிக்கலால் ஏற்படும் விளைவுகள்
·          உடன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தல்
கடிதம் பின்வரும் கூறுகளை அவசியம் கொண்டிருக்க வேண்டும்.
*அனுப்புனர்
*பெறுனர்
*திகதி
*பொருள் குறித்த தலைப்பு
*முகமன்
*பத்தி எண்கள்
*கையொப்பம்
( 14 புள்ளிகள்)
 மருதழகன் த/பெ முத்தையா
தலைவர்,
தாமான் வவாசான் குடியிருப்பாளர் சங்கம்
35500 பீடோர்,
பேராக்.

தலைவர்,
தாப்பா நகராண்மைக் கழகம்,
34500 தாப்பா.                                                  23-6-2005


மதிப்பிற்குரியீர்
கரு: குப்பைகள் அகற்றப்படமை
வணக்கம். கடந்த ஒரு வாரமாக எங்கள் குடியிருப்புப் பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்து வருகிறது என்பதனை தங்களது மேலான கவனத்துக்கு கொண்டுவர இப்பகுதியின் குடியிருப்பாளர் சங்கத் தலைவர் என்ற முறையில் கடமைப்பட்டுள்ளேன். இது போன்ற சம்பவங்கள் பெருநாட்காலங்களில் அடிகடி நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது என்பது வருத்தமளிக்கிறது.
2.     குப்பைகள் அகற்றப்படாமையால் இப்பகுதி வாழ் மக்கள் சொல்லவொன்ன இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அழுகும் காய்கறிகளால் முடை நாற்றம் வீசுகிறது. தெரு நாய்கள் குப்பைகளை
குப்பைத்தொட்டிகளிருந்து இழுத்து தெருவெங்கும் சிதறிக்கிடக்கச் செய்துள்ளது. அவற்றைப் பார்க்கச் சகிக்கவில்லை.
3.     இதன் காரணமாக ஈக்களின் தொல்லை பெருகியுள்ளது. குழந்தைகள் அடிகடி நோய்வாய்படுகின்றனர். காய்ச்சல், வயிற்றுப்போக்கு, உடல் அரிப்பு போன்ற உபாதைகள் பெரிகியுள்ளது.தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.
4.      ஆகவே, தாங்கள் தயைகூர்ந்து எங்களதுÐசிக்கலை தீர ஆராய்ந்து எங்களது குடியிருப்புப் பகுதியில் குப்பைகள் முறையாகவும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது தவறாமல்  குப்பைகளை அகற்ற தக்க நடவடிக்கைகளை  மேற்கொள்வீர்கள் என பெரிதும் எதிர்பார்க்கிறோம்.
நன்றி.

இவ்வண்ணம்


........................................................
மருதழகன் த/பெ முத்தையா
தலைவர்,
தாமான் வவாசான் குடியிருப்பாளர் சங்கம்
பீடோர்

No comments:

Post a Comment