Powered By Blogger

Thursday, August 30, 2012

எக்ஸ்பிரஸ் இலக்கண சுருக்கம்


PROGRAM TEKNIK MENJAWAB KERTAS SOALAN PMR BAHASA TAMIL
இலக்கணச் சுருக்கம்
தமிழ் நெடுங்கணக்கு
247 தமிழ் எழுத்துக்கள்
உயிர்
எழுத்துக்கள்
அ முதல் ஒள
வரை
உயிர் குற்றெழுத்துள்
அ,இ,உ,எ,ஒ (5)
உயிர் நெட்டெழுத்துக்ககள்
ஆ,ஈ,ஊ,ஏ,ஓ,ஒள (7)
சுட்டெழுத்துள்
அ,இ,உ
அது, இது,உவன்
வினா எழுத்துகள்
ஆ,எ,ஏ,ஓ,யா
மெய்யெழுத்துகள்
க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்ள்,ற்,ன் (18 எழுத்துக்கள்)
வல்லின மெய்யெழுத்துகள்
க்,ச்,ட்,த்,ப்,ற்
மெல்லின மெய்யெழுத்துகள்
ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்
இடையின
மெய்யெழுத்துகள்
ய்,ர்,ல்,வ்,ழ்,ன்
உயிர்மெய் எழுத்துகள்
12 உயிர் x18 மெய்=216 உயிர்மெய் எழுத்துகள்
இனவெழுத்து
வல்லினத்துக்கு மெல்லினம்
இனமாகும்.
க,  ச,  ட,  த,  ப,  ற
ங, ஞ,  ண, ந,  ம, ன
ங்கம், பஞ்சம், கண்டம், தந்தம்,
ம்பரம், மன்றம்
உயிர்மெய் குறில்
5 உயிர் x 18 மெய்=90 குறில் உயிர்மெய் எழுத்துகள்
உயிர்மெய் நெடில்
7 உயிர்x18மெய்=126 நெடில் உயிர்மெய் எழுத்துகள்
ஆயுத எழுத்து
 .
.  .(1)
கிரந்த எழுத்து
ஸ,ஷ,ஹ,ஜ,ஸ்ரீ,ஷி,
மாத்திரை
ஓர் எழுத்தை உச்சரிக்க எடுத்து கொள்ளும் கால அளவு.
எ.கா:
ம-ஒரு மாத்திரை
ன்- அரை மாத்திரை
னா-இரண்டு மாத்திரை
திணை
இரு வகைப்படும்
உயர் திணை,
அ. .றிணை
பால்
ஐந்து வகைப்படும்
ஆண்பால்,பெண்பால்
பலர்பால்,ஒன்றன்பால்,பலவின்பால்
எண்
இரு வகைப்படும்
ஒருமை, பன்மை
இடம்
மூன்று வகைப்படும்
தன்மை,முன்னிலை,படர்க்கை
வேற்றுமை உருபுகள்
எட்டு வகைபடும்
முதல் வேற்றுமை-
உருபு இல்லை-(அரசன்)
இரண்டாம் வேற்றுமை
ஐ-அரசனை
மூன்றாம் வேற்றுமை
ஆல்,ஆன்,ஒடு,ஓடு.உடன்
அரசனால்
நான்காம் வேற்றுமை
கு-அரசனுக்கு
ஐந்தாம் வேற்றுமை
இன்,இல்,இருந்து,நின்று
அரசனின்
ஆறாம் வேற்றுமை
அது,உடைய
அரசனது,
ஏழாம் வேற்றுமை
கண்,இடம்,பால்
அரசனிடம்
எட்டாம் வேற்றுமை
உருபு இல்லை(அரசே)
காலம்
மூன்று வகைபடும்
இறந்தகாலம்,நிகழ்காலம்,எதிர்காலம்
பெயர்ச்சொல்
ஆறு வகைப்படும்
பொருட்பெயர்- மேசை
இடப்பெயர்- பள்ளி
சினப்பெயர்,-காது
பண்புப்பெயர்,-கோபம்
தொழிற்பெயர்-ஓடு
வினைச்சொல்
தொழில் அல்லது செயலைக் குறிக்கும் சொல்: நீந்துகிறது.
வினைமுற்று
காலம்,திணை,எண், இடம்,பால் ஆகியவற்றை காட்டும் வினைச்ச்சொல்
எச்சம்
இரு வகைப்படும்
பெயரெச்சம்,வினையெச்சம்
எ,கா
படித்த பெண்
படித்து முடித்தான்
செய்வினை வாக்கியம்
எழுவாய்க்கு முதன்மை கொடுக்கப்படும் வாக்கியம்
அமுதன் உணவு உண்டான்.
செயப்பாட்டுவினை வாக்கியம்
செயப்படு பொருளுக்கு முதன்மை கொடுக்கப்படும் வாக்கியம்
உணவு அமுதனால் உண்ணப்பட்டது
குன்றிய
வினை
செயப்படு பொருள் இன்றி வரும் வினைமுற்று
சிங்கம் கர்ஜித்தது.
குன்றா வினை
செயப்படு பொருள் ஏற்று வரும் வினைமுற்று
புலி மானை கொன்றது.
எழுவாய்
ஒரு வாக்கியத்தில் செயல் நடைபெறுவதற்கு காரணமாய் இருக்கும் பெயர்ச்சொல்.யார், எது, எவை என்ற வினாக்களுக்கு பதிலாக வரும்.
எ.கா:அத்தை முறுக்கு சுட்டாள்
பயனிலை
ஒரு வாக்கியத்தில் வினை முற்றாக வரும் வினைச்சொல்.
எ.கா:அத்தை முறுக்கு சுட்டாள்.
செயப்படுபொருள்
ஒரு வாக்கியத்தில் யாரை,எதை, எவற்றை என்னும் வினாக்களுக்கு
விடை யாக வரும்;
எ.கா:அத்தை முறுக்கு சுட்டாள்
உரிச்சொல்
பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் குணத்தை விளங் வைக்கும் சொல்
எ.கா:உறுமீன், சால உண்டான்
இடைச்சொல்
வாக்கியங்களைக் கருத்தால் இணைக்கப் பயன்படும் சொற்கள்
எ,கா: உம், ஆனால், ஏனெனில்
அடை
பெயரடை வினையடையென இருவகைப்படும்.
எ.கா.
அழகான பெண்(பெயரடை)
வேகமாக ஓடினான்(வினைஅடை)
வடசொல்
கிரந்த எழுத்துக்களை கொண்ட சொல்.
எ.கா:விஷம், ஹனுமான்,ஸ்ரீமான்
பகுபதம்

பிரிக்க முடிந்த சொல்
எ.கா:
காட்டு+இன்+ஆன்=காட்டினான்
பகாப்பதம்
பிரிக்கமுடியாத அடிப்படை சொல்
எ.கா: பொன், கண், கல்
வாக்கியம்
நான்கு வகைபடும்
செய்தி வாக்கியம்
நாளை அனைவருக்கும் விடுமுறை.
வினா வாக்கியம்
உமது வீடு எங்குள்ளது?
வேண்டுகோள் வாக்கியம்
அனைவரும் அமைதி காக்க வேண்டும்.
உணர்ச்சி வக்கியம்
நீர் அழிந்து போவாய்!
தன்வினை
பிறரைச் செய்விக்கும்வினைமுற்று
எ,கா: கற்றேன், உண்டாள்
பிறவினை
தனக்கு தானே செய்யப்படும் வினைமுற்று
எ,கா: கற்பித்தேன், உண்பித்தாள்.
இடுகுறி பெயர்
காரணமின்றி முன்னோர் இட்ட பெயர்; கல், மண், கடை
காரணப் பெயர்
காரணம் குறித்து வரும் பெயர்
மண்வெட்டி, பறவை, நாற்காலி


உடன்பாட்டு வினை
தொழிலை நிகழச் செய்யும் வினை முற்று
நாளை வருவான்
எதிமறை வினை
தொழில் நிகழாமல் செய்யும் வினை முற்று
நாளை வாரான்
போலி
முதல்.இடை,கடை என மூன்று வகைப்படும்.
யானை – னை(கடைப்போலி)
குயவன் – குவன்(இடைப்போலி)
குடல்   -  குடர் (கடைப்போலி)
ஆகுபெயர்
ஆறுவகைப்படும்
1.பொருளாகு
சாம்பாரை இறக்கு
2.இடவாகு
மலேசியா வென்றது
3.காலவாகு
கார் அறுத்தான்
4.சினயாகு
தலக்கு ஒரு வெள்ளி கொடு.
5.தொழிலாகு
முறுக்கு விற்றான்
6.பண்பாகு
வெள்ளையுடுத்தி கோவிலுக்குச் சென்றான்
இயல்பு புணர்ச்சி
மாற்றமின்றி புணர்வது
மனம்+இல்லை=மனமில்லை
விகாரப் புணர்ச்சி
மூன்று வகைபடும்
தோன்றல், திரிதல், கெடுதல்
தோன்றல்,
புணர்ச்சியின்போது புதிதாக தோன்றும் எழுத்து
இ+காடு=இக்காடு (க்)
 திரிதல்,
புணர்ச்சியின்போது மாறுதல் அடையும் எழுத்து
மண்+குடம்= மட்குடம் (ட்)
கெடுதல்
புணர்ச்சியின்போது மறையும் எழுத்து
காரம்+ வடை=காரவடை (ம்)
சந்தச்சொற்கள்
ஒத்த ஓசையுடைய சொற்கள்
வண்டு,நண்டு,கண்டு,பண்டு
எதுகை
கவிதை வரியில் இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது.
ட்டமான தட்டு
ட்டு நிறைய லட்டு
மோனை
கவிதை வரியில் முதலாவது
 எழுத்து ஒன்றி வருவது.
ன்பு மனம் கனிந்த பின்னே அச்சமாகுமா
ன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
எழுத்து:நாராயணன் கிருஸ்ணன்
NarayananKrishnan
@SMK SYEIKH ABDUL GHANI,BIDOR



No comments:

Post a Comment