Powered By Blogger

Tuesday, May 18, 2010

படிப்பது எப்படி?


இந்த கேள்விக்கு விடை காண்பதற்கு முன்பு, வேறு சில கேள்விகளை உங்களது குழந்தைதனக்கு தானே கேட்டுக்கொண்டு தெளிவு பெற வேண்டும்.
பள்ளியில் கொடுத்துள்ள ஒரு வேலை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் முடிக்கப்பட்டால், அதுஎப்படி பார்க்கப்படும்? அதற்கு எவ்வளவு பாராட்டு கிடைக்கும்? எவ்வளவு மனநிறைவைதரும்?
இந்த வேலையை தரமாகவும் நேர்த்தியாகவும் செய்து முடிக்க எவ்வளவு நாள் அல்லது நேரம்ஆகும்?இந்த வேலையை எப்படி ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அல்லது ஒவ்வொரு நாளுக்கும்பிரித்துக் கொள்வது?
இந்த கேள்விகளுக்கு விடைகண்டு விட்டால், போதும். திட்டம் தயார்.
உதாரணமாக, தேர்வுக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கிறது என வைத்துக் கொள்வோம்.
படிக்க வேண்டியது 10 பாடங்கள் என்றால், ஒரு நாளைக்கு ஒரு பாடம் என்று பிரித்துக்கொண்டு படிக்கலாம். இது தான் திட்டம்.
இப்படி படிக்கும்போது படிப்பு சுமையாக இருக்காது. எளிதாகவும் தெளிவாகவும் படிக்க முடியும்.படிப்பதில் தானாக படிப்பது. படித்ததை ஒப்பிப்பது. படித்ததை எழுதிப்பார்ப்பது என்று பல்வேறுவகைகள் உள்ளன.
ஆனால், படித்த பாடத்தை ஒரு ஆசிரியரை போல பிறருக்கு சொல்லித்தருவது மிகச்சிறந்தபடிப்பு.
அப்படி சொல்லித்தரும்போது, பாடம் மேலும் தெளிவாக புரியும். மனதில் ஆழமாகப் பதியும்.மேலும் பாடத்தை யாராவது ஒருவருக்கு சொல்லித்தரும் போது, அவர் பாடம் சம்பந்தமாகஎழுப்பும் சந்தேகங்களை எதிர்கொள்ள நேரிடும். அந்த சந்தேகம் நமக்கு அதுவரையில்தோன்றாமல் இருந்திருக்கும்.
அவர் கேட்டவுடன், அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக மேலும் ஆழமாக பாடத்தைபடிப்போம். அது இன்னும் நம்மை தெளிவு படுத்தும்.
சரி, யாருக்கு சொல்லி தருவது?ஒரு மாணவன் அல்லது மாணவி தனது வகுப்பில் படிக்கும் சக மாணவன் அல்லதுமாணவிக்கு சொல்லி தரலாம்.
பெற்றோருக்கு நேரம் இருந்தால், பெற்றோரே மாணவர்களாக இருக்கலாம். உங்களது குழந்தைஉங்களுக்கு பாடம் நடத்துவது, உங்களுக்கும் புது அனுபவமாக இருக்கும்.
ஒரு பாடத்தை குழந்தை எப்படி சொல்லித் தருகிறாள் அல்லது தருகிறான் என்பதை கவனிக்கவேண்டும்.சம்பந்தப்பட்ட பாடத்தில் குழந்தை எந்த அளவிற்குத் தயாராகி இருக்கிறார்?பாடத்தை எவ்வளவு நேரத்தில் நடத்துகிறார்?
பாடம் நடத்தும்போது எளிமையான உதாரணங்களுடன் விளக்குகிறாரா?
பாடம் நடத்தும்போது நம்மிடம் இடையிடையே கேள்விகள் கேட்டு, அதற்கு பதிலைகூறுகிறாரா? அதாவது அவர் மட்டுமே பேசிக் கொண்டிருக்க நாம் வெறுமனேகேட்டுக்கொண்டிருக்க என்று இல்லாமல், நம்மையும் அந்த உரையாடலில் பங்கெடுக்கவைக்கிறாரா?
பாடத்தை ஒரு நல்ல அறிமுகத்துடன் ஆரம்பித்து முடிக்கும்போது ஒரு நல்ல முடிவுடன்முடிக்கிறாரா?
பாடம் நடத்தும் போது உற்சாகமாக நடத்துகிறாரா?
இப்படி அனைத்து விஷயங்களையும் நாம் கவனிக்க வேண்டும்

No comments:

Post a Comment