Powered By Blogger

Monday, September 16, 2013

பத்தாங் பாடாங் மாவட்ட வளர்தமிழ் விழா-2013

தமிழ் நேசனில் செய்தி
          கடந்த 6 -4-2013ல் சேக் அப்துல் கணி இடைநிலைப் பள்ளி, பீடோரில் 13ஆம் ஆண்டு பத்தாங் பாடாங்  அளவிளான வளர்தமிழ் விழா விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவினை பத்தாங் பாடங் மாவட்ட இடைநிலைப்பள்ளிகளின்  தமிழ்மொழி பாடக்குழுவின் தலைவர் திரு.நாராயணன் கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் பத்தாங் பாடாங் மாவட்டத்தில்  உள்ள  பதினாங்கு இடைநிலைப் பள்ளிகளைப் பிரதிநிதித்து ஏறத்தாள 230  மாணவர்கள் பங்கு பெற்றனர். நிகழ்வை பேரா மாநில தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளர் திரு.நா.மனோகரன் அவர்கள்  தொடங்கி வைக்க பிற்பகல் 3.00 வரை நடைபெற்றது. வந்திருந்த மாணவர்களுக்கு சுவையான காலை உணவும் மதிய உணவும் வழங்கப்பட்டது. நிறைவு விழாவுக்கு  தொழில் அதிபர் சுங்கை கிருஷ்ணன்  அவர்கள் வருகை தந்து, சிறப்பித்தார். திரு.கிருஷ்ணன் அவர்கள்  வழங்கிய தாரளாமான நன்கொடையால் இந்நிகழ்வு இந்நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற முடிந்ததை திரு.நாராயணன்   அவர்கள் தமது நன்றியுரையில் குறிப்பிட்டார். சிலிம் ரீவரைச் சேர்ந்த டத்தோ சுல்கிப்லி முகமட் இடைநிலைபள்ளி தொடர்ந்து இரண்டாவது முறையாக  வாகையர் பட்டத்தை வென்றது.
வருக! வருக!

மீண்டும் ரோகிணிதான் வாகையாளர். வாழ்த்துக்கள்

என்ன ஒரு சந்தோஷம்

எங்க ஊர் பெருசுங்க

இன்னும் அரங்கம் நிறையலெயே

வளர்தமிழ்விழா ஆபத்தாண்டவர் கிருஷ்ணன்

No comments:

Post a Comment